Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இலியானா. வைரலாகும் பதிவு

actress ileana-announce-her-pregnancy

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை இலியானா. தமிழில் கேடி என்ற படத்தில் மூலம் அறிமுகமான இவர் இறுதியாக தளபதி விஜய் உடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வரும் இலியானா தெலுகு இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இலியானா தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

விரைவில் என்னை சந்திக்க வரும் உன்னை வரவேற்க அவளுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என சொல்லி இலியானா புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னது இலியானாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நீண்ட நாட்களாக தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்தது இந்த குழப்பத்திற்கு காரணமாக மாறியுள்ளது.