Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல்முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா. என்ன குழந்தை தெரியுமா?

actress ileana-blessed-with-boy-baby

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் சினிமா பக்கம் சென்று வாய்ப்பில்லாமல் உடல் எடை கூடி குண்டாகினார்.

நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் திடீரென கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தன்னுடைய கர்ப்பம் குறித்து அறிவித்து பல மாதங்கள் கழித்து தன்னுடைய காதல் கணவரை அறிமுகப்படுத்தினார்.

இப்படியான நிலையில் தற்போது ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருப்பதையும் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தன்னுடைய மகன் பிறந்ததாக தெரிவித்து மகனின் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தனது மகனுக்கு கோ ஃபோனிக்ஸ் டோலன் என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.