மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தின் இந்தி ரீமேக் காண குட் லக் ஜெர்ரி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அவரது தந்தையான போனிகபூர் தமிழில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தையும் தற்போது அவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுடில் பிரபல முன்னணி நடிகையாக வருவதற்கு கடினமாக முயற்சி செய்து வரும் ஜான்வி கபூர் தற்போது தனது அம்மாவின் கனவை நிறைவேற்ற காத்துக் கொண்டிருப்பதாக தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது நடிகை ஸ்ரீதேவி கௌரி ஷிண்டே இயக்கத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்தார். தற்போது இந்த இயக்குனரின் இயக்கத்தில் எப்படியாவது தான் நடிக்க வேண்டும் என்று ஜான்வி கபூர் தெரிவித்திருக்கிறார். ஏனெனில் நான் என் அம்மாவிடம் பேசியபோது, அவர் நீ நிச்சயமாக கௌரி ஹிண்டேவுடன் ஒரு படம் பண்ண வேண்டும், அதுதான் தனது ஆசை எனக் கூறியிருந்தார். அதனால் அவரது இயக்கத்தில் நான் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக நடிகை ஜான்வி கபூர் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.