Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாக்கு டப் கொடுக்கும் ஜோதிகா..!! ஜிம் ஒர்க் அவுட் வீடியோ வைரல்

actress jyothika in gym workout video

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சோலோ நாயகியாக படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் கார்த்தி உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தார். மேலும் நடிகை ஜோதிகா மம்முட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த படத்துக்காக அவர் கடுமையாக ஒர்க் அவுட் செய்து வரும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூர்யாவிற்கு டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)