தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ஜோதிகா தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்ட விஷயம் பிடித்து தெரிய வந்துள்ளது.
அதாவது தனுஷ், ரகுவரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
ஆனால் முதல் முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தது ஜோதிகா தான் இன்று தற்போது தெரியவந்துள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படத்தின் வாய்ப்பை நடிகை ஜோதிகா தவறவிட அது நயன்தாராவுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியக்க அமைத்துள்ளது.
ஒருவேளை யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.