தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி.
இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததால் அவருக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
இதன் மூலம் காவியாவிற்கு இன்னும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமான நிலையில் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறினார்.
தற்போது முழுக்க முழுக்க வெள்ளித்திரையில் கவனம் செலுத்துவதற்காக விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதே சமயம் இவரது போட்டோக்கள் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடிக் கொண்டே செல்கிறது.
அந்த வகையில் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram