Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வரலாற்றில் படு மோசமான நஷ்டத்தை சந்தித்துள்ள நடிகை கங்கனா படங்கள்- ஒரு சதவீதம் கூட இல்லையே

Actress Kangana Ranaut's films have suffered a terrible loss

பாலிவுட் சினிமாவில் கதைக்களில் தரம் இருக்கிறதோ இல்லையோ பட்ஜெட் மட்டும் பெரிய அளவில் இருக்கிறது. சாதாரண படத்திற்கு கூட இப்போது ரூ. 100, 200 கோடிக்கு மேல் பட்ஜெட் போடுகின்றனர்.

ஆனால் அப்படி பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் அனைத்தும் ஹிட் லிஸ்டில் இருக்கும் என கூற முடியாது.

நடிகை கங்கனா ரனாவத் எதையே தைரியமாக பேசக் கூடியவர் ஒருவர். படங்களிலும் மற்ற நடிகைகளை போல ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, காதல் காட்சிகள் நடிப்பது என இல்லாமல் தனது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் தலைவி, Dhaakad போன்ற படங்கள் ரிலீஸ் ஆனது. இரண்டுமே ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான ஒரு படம், ஆனால் இரண்டு படங்களின் வசூலும் 1 சதவீதம் கூட வரவில்லை.

தலைவி ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராக ரூ. 1.91 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது, அதேபோல் Dhaakad படம் ரூ. 100 கோடிக்கு மேல் பட்ஜெட் என்றாலும் இதுவரை ரூ. 4 கோடி வரையே வசூலித்துள்ளது.

படங்கள் இப்படி வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்து வந்தாலும் கங்கனா ரனாவத் சமீபத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பில் காரை வாங்கி கலக்கி வருகிறார்.