Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்தம் கொடுக்காதீங்க.. கேவலமா திட்றாங்க.. சினேகன் மனைவி கனிகாவின் வைரலாகும் வீடியோ

Actress Kannika Ravi Warning to Snehan

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்த இவர் நடிகை கன்னிகா ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு சில மாதங்களில் இவர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெகு விரைவாகவே சினேகன் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடினார்கள். அப்போது சினேகன் தன்னுடைய மனைவிக்கு முத்தமிட அவர் இப்படி எல்லாம் முத்தம் கொடுக்காதீங்க கெட்ட வார்த்தையில திட்றாங்க இனி இப்படி முத்தம் கொடுக்கும் வீடியோவை போடக் கூடாது என முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.