தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் சினேகன். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இளம் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது கன்னிகா பெரும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழில் அவருக்கு மீண்டும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இந்த தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.