Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொங்கல் வசூலை குவிக்கப் போவது தல தளபதி கிடையாது! இவர் தான்.. சர்ச்சை பதிவை வெளியிட்ட கஸ்தூரி.

actress-kasthuri-viral-post-about-varisu-thunivu

தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி. எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இன்று உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படும் வாரிசு & துணிவு திரைப்படம் குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், மேலிடத்து ஆசியுடன், ₹2000 தெனாவட்டான டிக்கெட்டுகளுடன், பொங்கல் வசூலை குவிக்கப் போவது யார்? தலயா & தளபதியா என்று பதிவிட்டு, சந்தேகமே வேண்டாம் உதயநிதி ஸ்டாலின் தான் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேலும் எதுவாக இருந்தாலும் இது ரெட் ஜெயன்ட் பொங்கல், பொங்கலோ பொங்கல். என்று அப்பாதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு & துணிவு இரண்டு திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.