தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாக இருந்த திரைப்படம் வணங்கான்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் சூர்யா திடீரென இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து இந்த படத்தில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்க இருந்த கீர்த்தி ஷெட்டியும் விலகி கொண்டார்.
இந்த நிலையில் கஸ்டடி படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற கீர்த்தி ஷெட்டி ப்ரொடக்ஷன் பணிகளுக்கான நாட்கள் நீண்டு கொண்டே சென்றதால் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
சூர்யா மற்றும் பாலா இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.