தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய் சூர்யா தனுஷ் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அண்ணாத்த படத்தில் நடித்தபிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் நடிக்காமல் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், சாணி காகிதம் படத்தில் தாறுமாறான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவரிடம் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் உங்களை மறந்து விட்டாரா என கேட்டதற்கு அதற்கெல்லாம் வாய்ப்பில்லை அவருடன் 3 படத்தில் சேர்ந்து நடித்து இருக்கிறேன். நிச்சயம் இருவரும் சேர்ந்து நடிக்கும்படி வருங்காலத்தில் கதைகள் வரும் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். அதே போல் சங்கர், ராஜமவுலி மற்றும் மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
