தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் முன்னிட்டு மொழி படங்களின் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.
இறுதியாக நானி நடிப்பில் வெளியான தசரா படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இந்த சமயத்தில் இவர் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்களா? எப்போது திருமணம் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார்.
அதாவது நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனக்கு காதல் எதுவும் இல்லை என்பதை தெரியப்படுத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
