தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிஸியான நடிகையாக சுற்றி திரிபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ‘இது என்ன மாயம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் இவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது ரஜினிமுருகன், ரெமோ, தொடரி போன்ற படங்களில் மூலம்தான். இவரது அழகான சிரிப்பு மற்றும் எதார்த்தமான நடிப்பினை கொடுத்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதனால் தற்போது கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளாகக் தேடி நடித்துக்கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் சமீபத்தில் வெளியான ‘சாணிக் காகிதம்’. செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் வெறித்தனமான நடிப்பினை கொட்டி தீர்த்து இருப்பார் என்றே சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தற்போது தனது செல்லப்பிராணியான நாயை தனி விமானத்தில் வைத்து கூட்டி கொண்டு ஊர் சுற்றியிருக்கிறார். இதனை புகைப்படங்களாக எடுத்து கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இணையத்தில் பலர் ‘பணம் கோடிக்கணக்கில் கொட்டி இருந்தால் இப்படித்தான் செய்யத் தோன்றும்’ என்று பல கேலியான கருத்துக்களை கமெண்டின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram