தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இறுதியாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார். இப்படியான நிலையில் இவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
கல்லூரியில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட போது அதற்காக இவர் 500 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அதுதான் நான் வாங்கிய முதல் சம்பளம் என பெருமையாக பேசியுள்ளார்.