Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தோனியை புகழ்ந்து பேசிய குஷ்பூ. வைரலாகும் தகவல்

actress khushbu-post-goes-viral

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் குஷ்பு. இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் படிக்க தமிழ் திரையுலகிற்கு 1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

டோனி – குஷ்பு மாமியார் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை சந்துள்ளார்.

டோனி – குஷ்பு மாமியார் மேலும், தனது மாமியார் டோனிக்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து, “ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, அவர்கள் பிறக்கிறார்கள். அதை டோனி நிரூபித்துள்ளார். எங்கள் சிஎஸ்கே தலை டோனியை பாராட்ட வார்த்தைகள் இன்றி இருக்கிறேன். அவர் என் மாமியாரை சந்தித்தார். அவருக்கு 88 வயது. நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அவர்களுடைய வாழ்க்கையில் சேர்த்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

actress khushbu-post-goes-viral
actress khushbu-post-goes-viral