Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காமெடி நடிகை கோவை சரளாவின் ஆள் அடையாளமே தெரியாத புகைப்படம் இணையத்தில் வைரல்

Actress Kovai Sarala Look in Sembi Movie

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய காடன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கும் படம்தான் “செம்பி”. இந்தப்படத்தில் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் மற்றும் தமிழ் சினிமாவின் காமெடி குயின் ஆன கோவைசரளா அவர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படமானது 24 பயணிகளை வைத்து கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் வரை பேருந்தில் செல்வதைப் போல் எடுத்துள்ளனர். இதில் பயனாளிகளில் ஒருவராக அஸ்வினும் 70 வயதான பாட்டி போல் கோவை சரளாவும் நடித்துள்ளனர்.

இதுவரை எப்போதுமே காமெடி கேரக்டரில் நடிக்கும் கோவை சரளா அவர்கள் இந்தப்படத்தில் சீரியஸாக பயங்கரமாக நடித்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

தற்போது செம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வித்தியாசமாக இருக்கும் கோவை சரளாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.