Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் குஷ்புவின் அண்ணன். வருத்தத்தில் குஷ்பூ போட்ட பதிவு

actress-kushboo-emotional-post

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தவர் நடிகை குஷ்பூ. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது மூத்த அண்ணன் ஆபத்தான நிலையில் இருப்பதாக மிகவும் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தனது சகோதரர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரில் இருக்கும் அவரது உடல் நிலையில் தற்போது சிறு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. உங்களது பிரார்த்தனை அவருக்கு தேவைப்படுகிறது. என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு பலரும் நடிகை குஷ்புக்கு ஆறுதலான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.