தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. நாயகியாக பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் போட்டோவை வெளியிட்ட ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதுகு தண்டுவட வால் எலும்பில் அறுவை சிகிச்சை செய்து செய்து கொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருவதாக குஷ்பூ தெரிவித்துள்ளார். விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப ரசிகர்களிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
குஷ்பூ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிட்டுள்ள இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.