தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. பல்வேறு படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருவது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக சின்னத்திரையில் புதிய சீரியல் இன்று ஒளிபரப்பாக உள்ளது. பெண் உரிமை, பெண் சுதந்திரம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் நடிகை குஷ்பு தன்னுடைய தம்பியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவரது தம்பி பெயர் அப்துல்லா. இவர் தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மாய மோகினி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
பலருக்கும் தெரியாத இந்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்பு தன்னுடைய தம்பியுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
