90களில் கலக்கிய பல நடிகைகள் இப்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். ஆனால் சிலர் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டனர்.
அப்படி அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் நடிகை லைலா. திருமணம் ஆன பிறகு சினிமா பக்கமே இவரை காணவில்லை.
தற்போது அவ்வப்போது அவரது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. இந்த நிலையில் லைலா பற்றி ஒரு சூப்பர் தகவல்.
அதாவது அவர் பிரபலமான சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் நடிக்கிறாராம் லைலா.