Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தையில நான் எப்படி இருக்கேன் பாருங்க… Childhood போட்டோக்களை வெளியிட்ட லாஸ்லியா – வாவ் எவ்வளவு அழகு பாருங்க.!!

நடிகை லாஸ்லியா தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தற்போது தமிழில் மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் அறிமுக நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்போது தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

குழந்தையில் செம க்யூட்டாக இருக்கும் லாஸ்லியாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

https://twitter.com/Rockeyrakesh3/status/1302171781797613568?s=19