Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா

Actress Malavika involved in an accident

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.

2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் அவ்வப்போது சமூகவலைதளப்பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தன்னுடைய கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

நான் ஒரு போர் வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன் என புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.