தமிழ் சினிமாவில் பேட்ட என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து மாஸ்டர் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படியான நிலையில் தற்போது மாளவிகா மோகனன் இந்த படம் பற்றி பேட்டி அளித்துள்ளார். பேட்டை மாஸ்டர் என இரண்டு பெரிய படத்தில் நடித்திருந்தாலும் மாறன் படத்தில் தான் நான் முழு ஹீரோயினாக நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். மேலும் பிற்காலத்தில் படம் இயக்கினார் இயக்குவேன் என மாளவிகா தெரிவித்துள்ளார். சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்று இல்லாமல் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிடுவது ஏன் என கேட்டதற்கு எனக்கு என்ன 60 வயசா ஆகிடுச்சு? இப்போ கவர்ச்சி காட்டாமல் எப்போ காட்ட முடியும் என பதிலளித்துள்ளார்.
