Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணம் பற்றி பரவும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா.

actress meena-about-her-second-marriage

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. அஜித், விஜய், ரஜினி கமல் என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் காலமான நிலையில் அவர் நடிகர் தனுஷை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இந்த நிலையில் நடிகை மீனா இது குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். என்னுடைய கணவர் இல்லை என்பதையே என்னால் இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படி இருக்கையில் அதற்குள் எப்படி எனக்கு திருமணம் என செய்தி பரவுகிறது என எனக்கு தெரியவில்லை.

இப்போதைக்கு நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்னுடைய மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது, அதை தவிர்த்து நான் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.இதன் மூலம் இரண்டாவது திருமணம் என பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என்பதை மீனா உறுதி செய்துள்ளார்.

actress meena-about-her-second-marriage

actress meena-about-her-second-marriage