Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவகாரமாக கேள்வி கேட்ட ரசிகர்..தரமான பதிலடி கொடுத்த மீனா

actress meena chat with fans

தென்னிந்திய சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் இருக்கும் நிலையில் உடல்நல பாதிப்பால் கடந்த ஜூன் மாதம் வித்யாசாகர் மரணமடைந்தார். இந்தத் துயரத்தில் இருந்து மீனா கொஞ்சம் கொஞ்சமா தற்போது மீண்டு வருகிறார்.

இப்படியான நிலையில் மீனா ரசிகர்களுடன் உரையாடிய பழைய உரையாடியால்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் ரசிகர் ஒருவர் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்க அதற்கு மீனா தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நீங்க லேட் என பொறுமையாக பதில் அளித்துள்ளார்.

இன்னொரு ரசிகர் உங்களது வயசு என்ன என கேட்க பெண்களிடம் வயது கேட்பது அநாகரீகம் என உங்களுக்கு தெரியாதா என பதில் அளித்துள்ளார். மீனாவின் இந்த உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

actress meena chat with fans
actress meena chat with fans