Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை மீனாவின் கணவர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்

Actress meena-husband-vidyasagar-passes-away

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் அதன் பின்னர் குணசித்திர நடிகையாகவும் சில படங்களில் நடித்தார்.

மேலும் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி உடன் இணைந்து நடித்திருந்தார். இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகை மீனா குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருடைய கணவர் வித்யாசாகர் கொரோனா வைரஸ் என்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Actress meena-husband-vidyasagar-passes-away
Actress meena-husband-vidyasagar-passes-away