தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. பல மொழி சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த இவர் திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த இவர் கடந்த ஆண்டு தனது கணவரை இழந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தார்.
அதனால் நடிகை மீனாவை ஆறுதல் செய்ய பல முன்னணி நடிகைகள் தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சங்கவி நீண்ட நாள் கழித்து தனது தோழியான மீனாவை சந்தித்து இருக்கிறார். அப்போது இருவரும் இணைந்து விஷாலின் எனிமி திரைப்படத்தில் இடம் பெற்று பிரபலமான மாலை டும் டும் பாடலுக்கு சூப்பராக நடனமாடி ரீல்ஸ் செய்துள்ளனர். அதனை நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram