Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? தீயாக பரவும் தகவல்

actress-meena-second-marriage update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. அஜித் விஜய் சூர்யா என எக்கச்சக்கமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்தும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீனாவின் கணவர் வித்தியாசாகர் உடல் நல குறைபாடு காரணமாக மரணமடைந்தார்.

இந்த நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர்களுடைய பெற்றோர்கள் தான் குடும்ப உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து விசாரிக்கையில் உண்மையில் மீனாவுக்கு அப்படி ஒரு எண்ணம் சுத்தமாக இல்லவே இல்லை என தெரியவந்துள்ளது.

இரண்டாவது திருமணம் பற்றி பரவிய தகவல் அனைத்தும் வெறும் வதந்தி தான் என தெரிய வந்துள்ளது.

actress-meena-second-marriage update

actress-meena-second-marriage update