Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

2வது திருமண செய்தி ஊடகங்களுக்கு நடிகை மீனா எச்சரிக்கை

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் படங்களில் நடிக்க தொடங்கிய தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு நாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் வித்யாசாகர் உடல் நல குறைபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

அந்த தகவலில் உண்மை இல்லை என நம்முடைய தளத்தில் கூட தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் நடிகை மீனா பணத்துக்காகவும் வைரல் செய்திகளுக்காகவும் மற்றவர்களின் வாழ்க்கையில் இப்படி விளையாடாதீர்கள். அத்தனை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் அப்படி செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.