Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“இந்த உலகம் என்னை எப்படி பார்த்தாலும் அல்லாவின் பார்வையில் நான் ஒரு குழந்தை”: உணர்வுகளை வெளிப்படுத்திய மும்தாஜ்

தமிழ் சினிமாவில் டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மும்தாஜ்.

இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மும்தாஜ் மெக்காவிற்கு சென்று உள்ள நிலையில் அங்கிருந்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் “பாவம் செய்த என்னுடைய கண்கள் மெக்காவை பார்த்து விட்டது, நடனமாடிய என்னுடைய கால்கள் காபாவில் நடந்து விட்டது. அல்லாவின் பார்வையில் இன்று நான் மீண்டும் ஒரு குழந்தையாக பிறந்திருக்கிறேன்.

இந்த உலகம் என்னை எப்படி பார்த்தாலும் அல்லாவின் பார்வையில் நான் ஒரு குழந்தை.” என மும்தாஜ் கதறி அழுதபடி பேசி தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mumtaz (@mumtaz_mumo)