சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை நந்தினி. இந்த சீரியலில் இருந்து தான் இவருக்கு மைனா எனும் பெயர் கிடைத்தது.
இவர் சில மாதங்களுக்கு முன் பிரபல சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மைனா அளித்த பேட்டி ஒன்றில் தான் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது முதல் குழந்தைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.