தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்த வெற்றிடத்தை நிரப்ப போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் கூறி வருகின்றனர். மேலும் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் மூலமாக முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தல் நேரத்தில் கட்சியை அறிவிப்பேன் என கூறி மௌனம் காத்து வருகிறார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பேச்சு சமூக வலைதளப் பக்கங்களில் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் அடிக்கடி இவர்களை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பிஜேபியில் இணைந்து அரசியலில் பணியாற்றி வரும் நமீதா அவர்கள் பேட்டி ஒன்றில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.
இந்த நாள் வரை யாருக்கு ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது என கேட்டதற்கு ரஜினி கமல் என்னுடைய இரண்டு கண்கள். விஜய் என் மூளை மாதிரி சூர்யா என்னுடைய இதயம் என தெரிவித்துள்ளார்.
நால்வரில் யார் முதல்வர் என கேட்டதற்கு பதில் அளிக்காமல் மழுப்பலாக இப்படியொரு பதிலை தெரிவித்துள்ளார் நமீதா.
நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் அரசியலுக்கு வருவார்களா? ரஜினிகாந்த் புதிய கட்சியின் மூலம் அரசியலுக்கு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.