வேலவன் ஸ்டோர்ஸில் கலகலப்பாக கிறிஸ்துமஸ் பர்ஸஸ் செய்துள்ளார் நடிகை நான்சி ஜெனிபர்.
தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடையாக விளங்கி வருவது வேலவன் ஸ்டோர்ஸ். தூத்துக்குடி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற இந்த கடை தற்போது சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த கடையில் தீபாவளி தள்ளுபடி விற்பனை மக்களை வெகுவாக கவர்ந்திருந்ததை தொடர்ந்து தற்போது பொங்கல், கிறிஸ்துமஸ், நியூ இயர் சிறப்பு சலுகை விற்பனை நடைபெற்று வருகிறது.
கலக்கப்போவது யாரு புகழ் , பாலா ஆகியோர் இந்த கடைக்கு விசிட் அடித்து ஆடைகளை வாங்கி இருந்தனர்.
அவர்களை தொடர்ந்து பிக்பாஸ் வனிதா விஜயகுமாரும் இந்த கடைக்கு வருகை தந்து விருப்பமான உடைகளை தன்னுடைய குடும்பத்திற்காக வாங்கியிருந்தார்.
அதன் பின்னர் குக் வித் கோமாளி ஷிவானியும் இந்த கடைக்கு வருகை தந்திருந்தார். இந்த நிலையில் தற்போது கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிஃபர் வருகை தந்துள்ளார்.
அவரும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான ஆடைகளை வாங்கி சென்றுள்ளார். இதோ அந்த வீடியோ