தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயினியாக வலம் வருபவர் நயன்தாரா. மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போது ஜெயம் ரவியுடன் இறைவன், ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தனது 75 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நீலேஷ் கிருஷ்ணா இயக்க இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்திருப்பதாக படக்குழு அண்மையில் போஸ்டருடன் தெரிவித்திருந்தது. இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து புதிய அப்டேட்டாக இப்படத்தின் இசையமைப்பாளராக தமன் இணைந்திருப்பதாக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
The wait is over!!! The highly anticipated reveal of the #Ladysuperstar75 Music Director is here!
Welcoming the incredibly talented Music Director @MusicThaman to the team! 🎶🎉#Nayanthara #N75 @Nilesh_Krishnaa @ZeeStudios_ @tridentartsoffl @NaadSstudios #Ravindran… pic.twitter.com/ssIw1uShhD
— Zee Studios South (@zeestudiossouth) April 7, 2023