Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்ததற்கு விளக்கம் அளித்த நயன்தாரா விக்னேஷ்

actress nayanthara clarification on baby controversy

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கு எட்டு வருடங்கள் காதலித்து கடந்த நான்கு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருப்பதாக அறிவித்தார்.

கர்ப்பமாகாமல் கல்யாணம் ஆகி நான்கு மாதத்தில் குழந்தை எப்படி பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் பிறகு வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல் நயன்தாராவின் கேரளத்து உறவினர் ஒருவர் தான் வாடகை தாயாக இருந்து இந்த குழந்தையை பெற்றுக் கொடுத்தார் எனவும் தெரியவந்தது.

இந்த விஷயம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சட்ட விதிமுறைகளை மீறி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். தமிழக அரசும் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை பாயும் என தெரிவித்திருந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இது குறித்து அரசு தரப்பிற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது இருவரும் ஆறு வருடத்திற்கு முன்பாகவே சட்டப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி பெற்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தான் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

actress nayanthara clarification on baby controversy
actress nayanthara clarification on baby controversy