தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி கதாநாயகியுமானவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகியது.
விமர்சன ரீதியாக இதுவரை நல்ல பாராட்டுகளை பெற்ற வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதை நாம் அறிவோம். சமீபத்தில் கூட தீபாவளி ஸ்பெஷல் என்று இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமணம் கோலத்தில், மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ” மணப்பெண் நயன்தாரா ரெடி, மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் எங்கே? ” கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த புகைப்படங்கள் பிரபல விளம்பர படத்திற்காக நயன்தாரா எடுத்துக்கொண்ட என்று தெரியவந்துள்ளது.
