Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல் முறையாக முன்னணி நடிகருடன் இணையும் நடிகை நயன்தாரா – யார் அந்த நடிகர் தெரியுமா

Actress Nayanthara joins lead actor for the first time

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் அண்ணாத்த, மலையாளத்தில் நிழல் என மீதமுள்ள படங்களுக்கு படப்பிடிப்புகள் சென்றுகொண்டு இருக்கின்றன.

நடிகை நயன்தாரா தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் இதுவரை உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம் படத்தில், நடிகை நயன்தாரா கதாநாகியாக நடிக்க, அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

மேலும் விக்ரம் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் சரியாக இருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கன்ராஜுக்கு, கமல் ஹாசன் பரிந்துரை செய்ததாக தெரிவிக்கின்றனர்.