Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல் 232 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் தகவல்

actress nayanthara-joins-with-kamal-haasan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள கமல் 232 என்ற படத்தில் நடிக்க அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவின் பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா முதல்முறையாக கமலுடன் ஜோடி சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நயன்தாராவுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

actress nayanthara-joins-with-kamal-haasan
actress nayanthara-joins-with-kamal-haasan