Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாராவின் புதிய படத்தை வெளியிட்ட ஜீ ஸ்டுடியோ நிறுவனம்

Actress Nayanthara New Movie Update

நடிகை நயன்தாரா ரசிகர்கள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார். பெயருக்கு ஏற்றார் போல தென்னிந்தியா முழுவதும் தனது நடிப்பின் மூலம் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். 2023 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் இந்த ‘ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா நடிக்க இருக்கும் 75 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நயன்தாரா நடிக்க இருக்கும் 75வது படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கப் போகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்ற தகவலை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.