Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாரா குழந்தைகளின் பெயர்கள் இணையத்தில் வைரல்

actress nayanthara reveals her twin boys names update

தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களின் கனவு நாயகியான இவர் பல வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாய், தந்தையாக மாறி இருக்கும் இவர்கள் இதனால் வரை குழந்தைகளின் பெயர்களை வெளியிடாமல் மௌனம் காத்திருந்தனர். இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா முதல் முறையாக தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கான பெயர்களை அறிவித்திருக்கிறார்.

அதன்படி அக்குழந்தைகளுக்கு, “உயிர் ருத்ரோனில் என் சிவன் ( Uyir Rudroneel N Shivan) , என்றும் உலக் தெய்விக் என் சிவன் ( Ulag Deivik N Shivan)” என்றும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.