Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாராவிற்கு திருமணம் முடிந்ததா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

Actress Nayanthara With Vignesh Shivan

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக காத்துவாக்குல 2 காதல் உட்பட பல்வேறு திரைப் படங்கள் வெளியாக உள்ளன. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் அவர்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

திருமணமும் யாருக்கும் சொல்லாமல் சிம்பிள் ஆகவே நடக்கும் என அவர் தெரிவித்திருந்தார். திருமணம் முடிந்த பிறகுதான் அனைவருக்கும் விஷயத்தை கூறுவோம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக கோவில் ஒன்றிற்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது நயன்தாரா திருமணம் ஆன பெண்களை போன்று நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

இதனால் இருவருக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த புகைப்படமும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.