Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹேக்கர்கள் கைவரிசை…. நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்

Actress Nazriya's Instagram page freezes

நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை உறுதி செய்த நஸ்ரியா, “சில ஜோக்கர்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார்கள்.

அதனால் சில நாட்கள் என் அக்கவுண்டில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.