Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த செம்பருத்தி சீரியல் வில்லி.. வைரலாகும் வீடியோ

Actress Oorvambu Lakshmi Shopping with Velevan Stores

செம்பருத்தி வில்லி ஷாப்பிங் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஊர்வம்பு லட்சுமி. சீரியலில் செம வைலண்ட்டாக இருக்கும் இவர் நிஜ வாழ்க்கை ரொம்ப சைலன்ட் போல.

ஷாப்பிங் போன இடத்தில் குழந்தைகள் ஓட்டும் சைக்கிளை பார்த்ததும் குழந்தையாக மாறி அந்த சைக்கிளை ஓட்டி சந்தோஷப்பட்டு உள்ளார். டிநகரில் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

வனிதா விஜயகுமார், பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, உமா ரியாஸ்கான், தீனா, சதீஷ், வினோத், தீபா, அர்ச்சனா, ரோஜா சீரியல் புகழ் ஷாம்லி, பிரியங்கா என இந்த கடையில் ஷாப்பிங் செய்த பிரபலங்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த அளவிற்கு சாதாரண மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை என புகழ் பெற்று விளங்கி வரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தான் ஊர் வம்பு லட்சுமி ஷாப்பிங் செய்துள்ளார்.

இந்த கடையில் விதவிதமான புடவைகள், மேக்கப் ஐட்டம்ஸ், பொம்மைகள் என பலவற்றை வாங்கி உள்ளார். சீரியலில் அதிகம் பேசும் இவரை விடவும் கடையில் வேலை செய்பவர்களே அதிகம் பேசுகின்றனர் என அவரே கூறுகிறார்.

இதோ அந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோவை நீங்களும் பாருங்க..