தமிழ் சினிமாவில் களவாணி, மதயானை கூட்டம், மெரினா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா. அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று புகழின் உச்சத்திற்கே சென்றார்.
ஆனால் இந்த மொத்த புகழையும் 90ml என்ற ஒரே படத்தில் நடித்து கெடுத்து கொண்டார். பெமினிசம் என்ற பெயரில் படம் முழுவதும் குடியும் குடித்தனமாகவே இருந்தார் ஓவியா. லிப் லாக் கிஸ் டபுள் மீனிங் டயலாக் என கண்டமேனிக்கு நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென ஆண் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும் என பேசினார். மேலும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியும் கூறினார்.
இதனை அடுத்து நெட்டிசன் ஒருவர் பல மாதங்களுக்கு முன்னர் ஓவியா சுய இன்பம் குறித்து கேட்டதற்கு சுய இன்பம் தவறில்லை என சொல்லி இருந்த விஷயத்தை ஷேர் செய்து அப்போ இப்படி சொன்னீங்க இப்போ இப்படி பேசறீங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளன.