தென்னிந்திய திரைப்படங்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் SIIMA விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டின் SIIMA விருதுக்கான விழா நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டேவிற்கு SIIMA 2022 ஆம் ஆண்டிற்கான Youth Icon Female என்கின்ற விருதும், அதிகம் விரும்பப்பட்ட நடிகை என்ற விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் க்யூட்டான உடையில் தேவதை போல் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே விருது வாங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram