Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

actress priya bhavani shankar latest photo viral

செய்தி வாசிப்பாளராக தொடங்கி சின்னத்திரை சீரியல் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையிலும் அறிமுகமானார். அப்பிடத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது அருண் விஜயின் யானை, தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மாலை நேர வெளிச்சத்தில் கடற்கரையோரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.