தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பிரியதர்ஷினி. டிடி திவ்யதர்ஷினியின் அக்காவான இவர் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக தமிழ் சினிமாவில் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த சீரியலான எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடிக்க வரும் நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். இனி பிரியதர்ஷினிக்கு பதிலாக நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிக்கப்போவது யார் என்பது குறித்த புகைப்படத்துடன் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் ரசிகர்கள் சிலர் இவர் எதிர் நீச்சல் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.