Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்க வைத்த பிரியங்கா மோகன். வைரலாகும் ஃபோட்டோ

actress priyanka mohan latest photos

தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

தற்பொழுது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இணைந்திருக்கும் பிரியங்கா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருப்பார்.

இந்நிலையில் திடீரென்று ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அப்புகைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் பிங்க் நிற புடவையில் கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இவங்களுமா இப்படி? என்ற கேள்வி கலந்த ஆச்சரியத்துடன் அப்புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.