தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் பிரியங்கா மோகன். இவர் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் வரும் “செல்லம்மா”என்ற பாடல் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் பல ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இவர் சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டான்’ போன்ற படங்களில் நடித்து இருந்தார். இப்படங்கள் இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது பிரியங்கா மோகன் லேட்டஸ்டாக சில போட்டோ ஷூட் செய்துள்ளார். அந்த அசத்தலான புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.
View this post on Instagram